மங்கள்யான் பயணம் வெற்றி பெற கேரள கோயிலில் சிறப்பு பிரார்த்தனை: செப்டம்பர் 24-ல் நடக்கிறது

மங்கள்யான் பயணம் வெற்றி பெற கேரள கோயிலில் சிறப்பு பிரார்த்தனை: செப்டம்பர் 24-ல் நடக்கிறது
Updated on
1 min read

மங்கள்யான் விண்கலத்தின் பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டி கேரளா வில் சிறப்புப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சார்பில் மங்கள்யான் விண்கலம் கடந்த ஆண்டு விண்ணில் ஏவப் பட்டது. இது வரும் 24-ம் தேதி செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையை அடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.

மங்கள்யான் பயணம் வெற்றி அடைய வேண்டி திருவனந் தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற பழவங் கடி கணபதி கோயிலில் வரும் 24-ம் தேதி மங்கள்யான் என்ற பெயரில் சிறப்பு பூஜை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ‘திருவனந்தபுரம் நண்பர்கள்’ அமைப்பு செய்து வருகிறது.

இந்த அமைப்பின் தலைவர் பிகேஎஸ் ராஜன் இதுகுறித்து கூறியதாவது: மங்கள்யான் சிறப்பு பூஜையில் கலந்துகொள்ள மாநில கோயில் அறக்கட்டளை துறை அமைச்சர் வி.எஸ்.சிவகுமார் இசைவு தெரிவித்துள்ளார். பூஜை யின் போது, தேங்காய், தாமரை, கரும்பு, உன்னியப்பம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கணபதிக்கு படையலிடப்பட உள்ளன.

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் உட்பட பல்வேறு தரப்பு மக்கள் இந்த பூஜையில் கலந்துகொள்ள உள்ளனர் என ராஜன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in