10 என்சிபி எம்எல்ஏ-க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்: பிரகாஷ் அம்பேத்கர் தகவல்

10 என்சிபி எம்எல்ஏ-க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்: பிரகாஷ் அம்பேத்கர் தகவல்
Updated on
1 min read

தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் (என்சிபி) சேர்ந்த 10 எம்எல்ஏ-க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என வஞ்சித் பகுஜன் ஆகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் தெரிவித்துள்ளார்.

சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் பாரிபா பகுஜன் மகாசங்கத்தின் தலைவராக உள்ளார். இவர் கடந்த ஆண்டு வஞ்சித் பகுஜன் ஆகாடி கட்சியைத் (விபிஏ) தொடங்கினார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளிலும் விபிஏ-வும் அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியும் இணைந்து போட்டியிட் டன. இதில் அவுரங்காபாத் தொகுதியில் மட்டும் ஏஐஎம்ஐஎம் வேட்பாளர் வெற்றி பெற்றார்.

இந்நிலையில், பிரகாஷ் அம்பேத்கர் அகோலா நகரில் செய்தி யாளர்களிடம் நேற்று கூறும் போது, “மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே எங் களுக்கு வெற்றி கிடைத்தது. குறிப்பாக, இந்த தொகுதியில் முஸ்லிம்கள் காங்கிரஸுக்கு மாற்றாக எங்கள் கூட்டணிக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

288 தொகுதியிலும் போட்டி

மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் உள்ள 288 தொகுதியிலும் விபிஏ போட்டி யிடும். இதில் எங்கள் கட்சி முக்கிய பங்கு வகிக்கும். சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 10 எம்எல்ஏ-க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். இதுகுறித்து வரும் 7-ம் தேதி விவரமாக பேசுவேன்” என்றார்.

மக்களவைத் தேர்தலில் முஸ்லிம் மற்றும் தலித் வாக்குகள் பிரிய விபிஏ காரணமாக இருந்தது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர்களின் தோல்விக்கு இதுவும் ஒரு காரண மாக அமைந்துவிட்டது. 

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in