

நிழல் உலக தாதா ரவி புஜாரி யிடமிருந்து வந்த அச்சுறுத்தலை தொடர்ந்து, பாலிவுட் நடிகர் பொம்மன் இரானிக்கு போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ரவி புஜாரியிடமிருந்து அச்சுறுத்தல் வந்ததால் பொம்மன் இரானிக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளோம். இது தொடர்பாக நாங்கள் விசாரணை மேற்கொண்டுள்ளோம்” என்றார். எந்த வகையான அச்சுறுத்தல் என்பதை அவர் கூறவில்லை.
ஷாருக்கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே ஆகியோருடன் பொம்மன் இணைந்து நடித்த ‘ஹேப்பி நியூ இயர்’ என்ற படம் வரும் அக்டோபரில் திரைக்கு வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் அலி மொரானி வீட்டுக்கு வெளியில் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி 3 மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
இதற்கு 2 நாட்களுக்குப் பின் ஷாருக்கான் வீட்டுக்கு போன் செய்த ரவி புஜாரி, மொரானியிடமிருந்து ஷாருக்கான் விலகியிருக்க வேண்டும் என எச்சரித்ததாக கூறப்படுகிறது.