Published : 29 Sep 2014 10:09 AM
Last Updated : 29 Sep 2014 10:09 AM

சர்வதேச அளவில் டெல்லி மெட்ரோவுக்கு 2-வது இடம்

உலகில் உள்ள சிறந்த மெட்ரோ ரயில் சேவைகளை வரிசைப்படுத்தும் 'நோவா' மற்றும் 'கோமெட்' ஆகியவை இணைந்து ஆய்வு ஒன்றை நடத்தின. இணையம் மூலமாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் டெல்லி மெட்ரோவுக்கு 2ம் இடம் கிடைத்துள்ளது.

முதல் இடம் லண்டன் டி.எல்.ஆர். மெட்ரோவுக்கும், மூன்றாம் இடம் பாங்காக் மெட்ரோவுக்கும் கிடைத்துள்ளன.

இந்த ஆய்வு ‘ஈரோப்பியன் நார்ம் 13816' எனும் விதிமுறையின்படி நடத்தப்பட்டது. ரயில்களின் எண்ணிக்கை, எளிதில் கிடைக்கும் தன்மை, சுலபமான பயன்பாடு, பயணிப் பதற்கு முன்பான தகவல், நம்பகத் தன்மை, வாடிக்கை யாளர் மீதான அக்கறை, வசதி, கூட்டம் மற்றும் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளில் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆண்டு ஏப்ரல் 28 முதல் மே 25ம் தேதி வரை நடந்த இந்த ஆய்வில் 41,000க்கும் மேற்பட்ட வர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். இந்த ஆய்வில் ஹாங்காங் எம்.டி.ஆர்., மெட்ரோ தி மேட்ரிட், பாரிஸ் ஆர்.ஏ.டி.பி., மெட்ரோ தி சான்டியாகோ உள்ளிட்ட 18 சர்வதேச மெட்ரோ ரயில் சேவை நிறுவனங்கள் கலந்து கொண்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x