நீங்கள் காயத்திலிருந்து மீண்டு நாட்டின் வெற்றிகளுக்கு மீண்டும் பங்களிக்க முடியும்: ஷிகர் தவணுக்கு நம்பிக்கை ஊட்டிய பிரதமர் மோடி

நீங்கள் காயத்திலிருந்து மீண்டு நாட்டின் வெற்றிகளுக்கு மீண்டும் பங்களிக்க முடியும்: ஷிகர் தவணுக்கு நம்பிக்கை ஊட்டிய பிரதமர் மோடி
Updated on
1 min read

உலகக்கோப்பை 2019 போட்டித் தொடரிலிருந்து காயம் காரணமாக ஷிகர் தவண் விலகியதையடுத்து அணியில் ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் காயமடைந்த ஷிகர் தவண் மீண்டும் வருவார், அரையிறுதியில் ஆடுவார் இப்போதைக்கு கையில் பிளாஸ்டர்தான் போட்டுக் கொண்டுள்ளார் என்று இந்திய அணியின் கேட்பன் விராட் கோலி அன்று முட்டுக் கொடுத்துப் பேசினார்.

ஆனால் அவர் காயத்திலிருந்து இன்னும் மீளவில்லை ஆகவே அவர் உலகக்கோப்பையிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டு தற்பொது விஜய் சங்கரும் காயமடைந்திருப்பதால் ஆப்கானுக்கு எதிரான போட்டியில் ரிஷப் பந்த் ஆடுவார் என்ற செய்திகளும் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பிரதமர் மோடி ஷிகர் தவணுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக தன் ட்வீட்டில் “டியர் ஷிகர் தவண், பிட்ச் உங்களை இழந்திருந்தாலும் விரைவில் நீங்கள் குணமடைந்து மீண்டும் களம் புகுந்து நாட்டுக்காக மேலும் வெற்றிகளில் பங்களிப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in