சிறையில் வளரும் குழந்தைக்கு பள்ளி சேர்க்கை: ஆய்வின்போது நடவடிக்கை மேற்கொண்ட சத்தீஸ்கர் ஆட்சியர்

சிறையில் வளரும் குழந்தைக்கு பள்ளி சேர்க்கை: ஆய்வின்போது நடவடிக்கை மேற்கொண்ட சத்தீஸ்கர் ஆட்சியர்
Updated on
1 min read

சிறைச்சாலையில் வளரும் குழந்தைகளை பல்வேறு பள்ளிகளில் படிக்க சேர்க்கை பெற்றுத் தந்ததன்மூலம் அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தந்துள்ளார் சத்தீஸ்கர் மாவட்ட ஆட்சியர் சஞ்சய் அலாங்.

தனது இதயப்பூர்வமான பணியால் மாநிலத்தின் முக்கிய பேச்சாக மாறியுள்ள ஆட்சியரின் முயற்சி குறித்த விவரம்:

குஷி, ஒரு 5 வயது பெண் குழந்தை, இவர் மற்ற குழந்தைகளோடு ஓடியாடி விளையாட வேண்டிய வயது, ஆனால் தந்தை செய்த ஒரு குற்றச்செயலால் சிறையில் முடங்கிக் கிடக்கிறார். சிறையில் இருப்பவர்களும் அக்குழந்தையை கண்டுகொள்வதில்லை. அவரது தந்தை அதே சிறையில் இருப்பவர்தான் என்றாலும் அவரோ சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

அக்குழந்தைக்கு தாயும் இல்லை. 15 நாள் குழந்தையாக இருந்தபோதே அவரது தாய் மஞ்சள்காமாலை நோய் தாக்கி உயிரிழந்தார்.

இந்நிலையில்தான் பிலாஸ்பூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சஞ்சய் அலாங் தனது வழக்கமான சிறைச்சாலை ஆய்வுக்காக வந்திருந்தார். அங்கு பெண் சிறைவாசிகள் மத்தியில் வளரும் குஷியை சந்தித்துப் பேசினார்.

ஆரம்பத்தில் தயங்கிய பின் அக்குழந்தை, இந்த சிறையிலிருந்து வெளியேறவே தான் விரும்புவதாகவும் பள்ளியில் படிக்க விரும்புவதாகவும் என்று தெரிவித்ததாக ஆட்சியர் தெரிவித்தார்.

அக்குழந்தையிடமிருந்து கிடைத்த பதிலுக்குப் பிறகு சிறைத்துறை நிர்வாகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து, சிறை வளாகத்தில் உள்ள மற்றக் குழந்தைகளுடன் சென்று படிக்கும்வகையில் பள்ளியில் சேர்க்கைக்கான முன் முயற்சியை ஆட்சியர் மேற்கொண்டார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சஞ்சய் அலாங் தெரிவிக்கையில், ''நாங்கள் வருடாந்திர ஆய்வு செய்ய சிறைக்குச் செல்வோம். அங்கு அந்தப் பெண்ணைப் பார்த்தோம். அவளைப் பற்றி விசாரித்தோம். அங்குதான் அவளது சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அக்குழந்தை தாய் இல்லை.

அதனால் அவள் கவனித்துக்கொள்ளப்பட்டாள். மற்ற எல்லா குழந்தைகள் பெறும் ஒரு நல்ல வாழ்க்கையை உதவி செய்ய முன்வந்துள்ள பல அமைப்புகளோடும் இணைந்து அவளுக்குக் கிடைக்க வேண்டும் என நாங்கள் முயற்சித்தோம்'' என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in