மக்களவை இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமார் பொறுப்பேற்பு

மக்களவை இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமார் பொறுப்பேற்பு
Updated on
1 min read

மக்களவை இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.பி. வீரேந்திர குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 352 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக மட்டும் தனித்து 303 தொகுதிகளைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு 52 இடங்கள் மட்டுமே கிடைத்தன.

மே மாதம் 30-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2-வது முறையாகப் பதவியேற்றது. இதைத் தொடர்ந்து புதிய மக்களவை இன்று கூடுகிறது.

புதிய மக்களவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.பி. வீரேந்திர குமார் நியமிக்கப்பட்டார். மத்தியப் பிரதேச மாநிலம் திகம்ஹர் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி.யான வீரேந்திர குமார் கடந்தமுறை மத்திய அமைச்சராக பதவி வகித்தவர்.

இந்நிலையில், குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இடைக்கால சபாநாயகர் மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 542 உறுப்பினர்களுக்கு அவர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். வரும் 19-ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

வரும் 20-ம் தேதி மாநிலங்களவை கூட்டத்தொடர் தொடங்குகிறது. அன்றைய தினம் நடைபெறும் கூட்டுக் கூட் டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்ற உள்ளார்.

இதைத் தொடர்ந்து ஜூலை 4-ம் தேதி பொருளாதார ஆய் வறிக்கையும் ஜூலை 5-ம் தேதி மத்திய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளன. ஜூலை 26-ம் தேதி கூட்டத்தொடர் நிறைவடையும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in