

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில், தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (சார்க்) நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாடு இன்று தொடங்குகிறது.
இம்மாநாட்டில் பங்கேற்க இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று காத்மாண்டு வந்தார்.
முன்னதாக அவர் கூறுகையில், ‘‘இந்த பிராந்தியத்தில் நிலவும் பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்கு சார்க் மாநாடு உரிய தளமாக இருக்கும். பொதுவான சவால்களை எதிர்கொள்ள சார்க் உறுப்புநாடுகள் ஒன்றுக்கொன்று உதவிக்கொள்ள வேண்டும். நம் அண்டை நாடுகளை நாம் மாற்றிக் கொள்ள முடியாது. நமது நண்பர்களை மட்டும்தான் மாற்றிக் கொள்ள முடியும்’’ என்றார்.