

நீதிமன்றத்தில் பொய் தகவல் தெரி வித்து வரும் வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷண், காமினி ஜெய்ஸ்வால் மீது வழக்கு தொடர உத்தரவிடக் கோரி சிபிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நிலக்கரி ஊழல், 2ஜி அலைக் கற்றை ஊழல் வழக்கின் விசா ரணைகள், உச்சநீதிமன்றத்தின் கண் காணிப்பில் நடைபெற்று வருகின்றன. சிபிஐ இயக்குநர் குற்றம் சாட்டப்பட்ட வர்களை சந்தித்ததாக கூறப்படும் வழக்கும் விசாரிக்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில், சிபிஐ சார் பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மனுவில் பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளார். 2ஜி வழக்கின் விசாரணை அதிகாரி ரஸ்தோகி மாற்றப் பட்டு விட்டதாக கூறியுள்ளார். அவர் விசாரணை அதிகாரி அல்ல; மேற்பார்வை அதிகாரியாகவே இருந்தார். ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தில் வழக்கை தொடர முகாந்திரம் இல்லை என்று சிபிஐ இயக்குநர் கூறியதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். சிபிஐ இயக்குநர் ஒருபோதும் அப்படி தெரிவிக்கவில்லை.
பொதுநல மனுக்களுக்கான மையம் சார்பில் ஆஜராகி வரும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் சிபிஐ இயக்குநரின் வீட்டு வரவேற்பறை பதிவேடு தன்னிடம் இருப்பதாக கூறினார். பின்னர் தன்னிடம் நகல் இருப்பதாக கூறினார். அதை கொடுத்தவர் பெயரை கூறுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை தெரிவிக்க மறுத்துள்ளார்.
எனவே, நீதிமன்றத்தில் வேண்டு மென்றே பொய்யான தகவல்களை அளித்துள்ள வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷண் மற்றும் காமினி ஜெய்ஸ்வால் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ் வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்க உரிமம் வழங்கியதில் ஊழல் நடைபெற்றது தொடர்பான வழக்கு விசாரணையின்போது இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.