Published : 22 Sep 2014 04:45 PM
Last Updated : 22 Sep 2014 04:45 PM

மங்கள்யான் சுற்றுவட்டப்பாதையை சீராக்கும் பணி வெற்றி: இஸ்ரோ

மங்கள்யான் சுற்றுவட்டப்பாதையை சீராக்கும் இறுதிகட்டப் பணி வெற்றிகரமாக நிறைவடைந்ததாக இஸ்ரோ ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட 'மங்கள்யான்' விண்கலம் இன்னும் 2 நாட்களில் செவ்வாய் சுற்றுவட்டப்பாதையை அடையவுள்ள நிலையில், மங்கள்யான் சுற்றுவட்டப்பாதையை சீராக்கும் பணி இன்று மேற்கொள்ளப்பட்டது. பிற்பகல் 2.46 மணிக்கு இந்த பணியை இஸ்ரோ மேற்கொண்டது. 4 நொடிகளுக்கு இந்த சீரமைப்புப் பணி நடைபெற்றது.

இதேபோல், கடந்த ஜூன் 11-ல் மங்கள்யான் சுற்றுவட்டப்பாதையை சீராக்கும் பணியை இஸ்ரோ வெற்றிகரமாக செய்து முடித்தது. இது குறித்து இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில், (மார்ஸ் ஆர்ப்பிட்டர் மிஷன் -MOM) தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்கான 'மங்கள்யான்' விண்கலம் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி-25 ராக்கெட் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விண்ணில் ஏவப்பட்டது.

முன்னதாக, செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா அனுப்பியுள்ள மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் வந்துள்ளதாக இஸ்ரோ ஆராய்ச்சி மையம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் திங்கள்கிழமை காலை தெரிவித்துள்ளது.

>செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் மங்கள்யான் வந்துள்ளது, இந்தத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x