

டெல்லியிலுள்ள இரு தபால் நிலையங்களில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது, இரு அலுவலகங்களும் தூசு படிந்து, அழுக்கடைந்து இருந்ததால் கோபமடைந்து, அதிகாரிகளைக் கடிந்து கொண்டார்.
நாட்டிலுள்ள அரசு அலுவலகங்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இதன் ஒரு பகுதியாக ‘தூய்மையான இந்தியா’ பிரச்சாரத்தை அறிவித்தார்.
கடந்த 25-ம் தேதி, பாரதிய ஜனசங்கம் அமைப்பின் முன்னாள் தலைவர் பண்டிட் தீனதயாள் உபாத்யாவின் பிறந்த நாள் முதல் 2016 அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி வரை இப்பிரச்சாரம் நடைபெற உள்ளது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் நேற்று டெல்லி லோதி எஸ்டேட் மற்றும் கோல் பகுதியிலுள்ள தபால் நிலையங்களில் திடீர் ஆய்வு நடத்தினார். அப்போது, அந்த அலுவலகங்களின் கட்டிடங் களில் சிலந்தி வலைகள், ஊழியர் களின் மேஜைகளில் தூசு, சுற்றுப் பகுதிகளில் குப்பைகள் பரவிக் கிடந்ததைக் கண்டு, அவர் கோபமடைந்தார்.
இதற்காக, அங்குள்ள அதிகாரி களை அழைத்து கடிந்து கொண்டார். தூய்மையான இந்தியா பிரச்சாரம் தொடர்பாக அவர்களுக்கு அறிவுறுத் தினார். மேலும், அலுவல கத்தை தூய்மையாக வைத்திருக்க உத்தர விட்டார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், “இன்று டெல்லியின் இரு தபால்நிலையங்களில் நேரில் சென்று, அதன் கோப்புகள், அலமாரிகளை பார்வையிட்டேன். அந்த அலுவலகங்கள் தூய் மையாக இல்லாதது அதிருப் தியை ஏற்படுத்தியது” எனப் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் அலுவலக இணை அமைச்சரான ஜிதேந்திர சிங்கும் தனது அமைச்சகம் அமைந்துள்ள நார்த் பிளாக் கட்டிடத்தில் சுத்தம் செய்யும் பணிகளை தொடங்கினார். ஒவ்வொரு அறைக்கும் சென்று அலுவலர்களிடமும் சுத்தமான இந்தியா பிரச்சாரம் பற்றி எடுத்துக் கூறி, தானும் துடைப்பத்தை கையில் ஏந்தி குப்பைகளை சுத்தம் செய்யும் பணிகளில் இறங்கினார். அவருடன் அவரது அலுவலக அதிகாரிகளும் சுத்தம் செய்வதில் ஈடுபட்டனர்.
மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானும் ‘தூய் மையான இந்தியா’ பிரச்சாரத்தை நேற்று தொடங்கினார். அவரது அமைச்சகக் கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதிகளில், நீண்ட குச்சி பொருத்திய துடைப்பம் மூலம் நின்றபடியே பெருக்கினார். அவருடன் உணவு அமைச்சக அதிகாரிகள் மற்றும் அலுவலர்களும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட் டனர்.
மற்ற அமைச்சர்கள்
கடந்த வெள்ளிக்கிழமை மத்திய மனிதவளத்துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி டெல்லி கேந்திர வித்யா பள்ளிகளில் ‘தூய்மையான இந்தியா’ பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார். மத்திய நீர்வளத்துறை அமைச்சரான உமா பாரதி கடந்த சனிக்கிழமை, தனது அமைச்சகம் அமைந்துள்ள ஸ்ரம் சக்தி பவன் வளாகத்தில் குப்பைகளை அகற்றி ‘தூய்மையான இந்தியா’ பிரச்சாரத் தைத் தொடங்கினார்.
பல்வேறு துறை அமைச்சர்களும் இப்பிரச்சாரத்தை விரைவில் தொடங்குவர் எனத் தகவல் வெளி யாகியுள்ளது.