

பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசாய் அமெரிக்காவில் மோடி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமையன்று அமெரிக்காவில் மேடிஸன் ஸ்கொயர் கார்டனில் நரேந்திர மோடி பேசினார். நிகழ்ச்சியின் துவக்கத்திற்கு முன்பு அரங்குக்கு வெளியே ஆயிரக்கணக்கான மோடி ஆதரவாளர்கள் கூடியிருந்தனர்.
அங்கு செய்தி சேகரிக்க சென்றிருக்கும் மூத்த பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசாய், ஏற்கெனவே அங்கு கூடியிருந்த சில மோடி எதிர்ப்பாளர்களை பேச அழைத்ததால், மோடி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
இது பற்றி நேற்று இணையத்தில் வெளியான வீடியோவில், ராஜ்தீப், அங்கிருப்பவர்களால் தாக்கப்படுவது பதிவாகியுள்ளது. ராஜ்தீப்-க்கு ஆதரவாக ட்விட்டரிலும் #IStandWithRajdeep என்ற ஹேஷ் டேக் பிரபலமானது.
ஆனால் இன்று காலை வெளியாகியிருக்கும் வேறொரு வீடியோ பதிவில், அங்கிருக்கும் ஆதரவாளர்களை ராஜ்தீப் ஆபாசமாக திட்டுவதும், பதிலுக்கு அவர்கள் திட்டுவதும், தொடர்ந்து முதலில் ராஜ்தீப் தாக்க முற்பட்டதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ பதிவையும் தற்போது பலர் பகிர்ந்து வருகின்றனர்.