

ஜம்முவில் பாகிஸ்தான் உள வாளியாக செயல்பட்டு வந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஜம்மு பிராந்தியத்தில் தீவிரவாத சம்பவங்களை மீண்டும் அரங்கேற்றும் பாகிஸ்தான் உளவு அமைப்பின் (ஐஎஸ்ஐ) முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடக்கத்தில், ஜம்முவில் உள்ள ரத்னுசாக் ராணுவ முகா முக்கு வெளியே புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக் கொண் டிருந்த இருவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். தோடா மாவட்டத்தை சேர்ந்த முஸ்தாக் அகமது மாலிக் (38), கதுவா மாவட்டத்தை சேர்ந்த நதீம் அக்தர் (24) என அடையாளம் காணப்பட்ட இவர்கள் இருவரும் ஐஎஸ்ஐ உளவாளிகள் எனத் தெரியவந்தது.
விசாரணையில், ஜம்மு பிராந் தியத்தில் மேலும் 4 பேர் ஐஎஸ்ஐ உளவாளியாக செயல்படுவதாக இவர்கள் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் கதுவா மாவட் டத்தை சேர்ந்த சதாம் உசேன், முகம்மது சலீம், முகம்மது ஷபி ஆகிய மூவரையும் உதம்பூர் மாவட்டத்தை சேர்ந்த சஃப்தர் அலியையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக அதிகாரிகள் நேற்று கூறும்போது, “ஜம்மு பிராந்தியத்தில் இளைஞர்களை தேர்வு செய்து அங்கு தீவிரவாத தாக்குதல்களை மீண்டும் அரங் கேற்றும் பணி தங்களிடம் ஒப் படைக்கப்பட்டதாக உளவாளிகள் கூறினர்.
எல்லைக்கு அப்பால், ஐஎஸ்ஐ அமைப்பில் கர்னல் அந்தஸ்தில் பணியாற்றும் இஃப்திகார் என்ற அதிகாரியுடனும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்புடனும் இவர் கள் நேரடித் தொடர்பில் இருந்து வந்துள்ளனர். இவர்களிடம் இருந்து பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் கைப்பற்றப் பட்டுள்ளன.
மொபைல் போனில் இவர்கள் அழித்துவிட்டதாக கூறும் சில தகவல்களை திரும்பப் பெற முயற்சி மேற்கொண்டுள்ளோம். ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர் புடைய மேலும் சிலர் கைது செய் யப்பட்ட வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தனர்.
முன்னதாக புல்வாமா மாவட்டத் தின் பஞ்சாரன் பகுதியில் தீவிரவாதி கள் நடமாட்டம் குறித்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியை சுற்றிவளைத்தனர்.
இதையடுத்து நடந்த தேடுதல் நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் இடையே மோதல் ஏற்பட்டது. நேற்று வரை நீடித்த இந்த மோதலில் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பை சேர்ந்த 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
- பிடிஐ