‘‘உள்துறை அமைச்சராக அமித் ஷா; இனி சவாலே இருக்காது’’ - இணையமைச்சர் பெருமிதம்

‘‘உள்துறை அமைச்சராக அமித் ஷா; இனி சவாலே இருக்காது’’ - இணையமைச்சர் பெருமிதம்
Updated on
1 min read

அமித் ஷா பெயர் அறிவிக்கப்பட்டவுனேயே இனிமேல் அனைத்து சவால்களும் முடிவுக்கு வந்து விடும் உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த் ராய் தெரிவித்தார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி 2-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து அமித் ஷா உள்ளிட்ட அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

இதில் அமித் ஷாவுக்கு உள்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அமித் ஷா இன்று தனது துறை அலுவலகத்துக்கு சென்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து உள்துறை இணையமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ள கிஷண் ரெட்டியும், நித்தியானந்த் ராயும் முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர்.

உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நித்தியானந்த் ராயிடம், உங்கள் துறையில் உள்ள சவால்கள் என்ன என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர் ‘‘எங்கள் கட்சித் தலைவர் அமித் ஷா எங்கள் துறைக்கும் தலைமை பொறுப்பேற்றுள்ளார். அவர் உள்துறை அமைச்சர் என பெயர் அறிவிக்கப்பட்ட உடனேயே சவால்கள் அனைத்தும் முடிவுக்கு வந்து விட்டன’’ எனக் கூறினார்.

பிஹார் மாநில பாஜக தலைவரான நித்தியான்ந்த் ராய், மக்களவைத் தேர்தலில் அம்மாநிலத்தில் இருந்து போட்டியிட்டு வென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in