Published : 16 Jun 2019 07:32 AM
Last Updated : 16 Jun 2019 07:32 AM

கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்துக்கு முன்னுரிமை தேவை: நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தல்

கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசு முன் னுரிமை அளிக்க வேண்டும் என்று டெல்லியில் நேற்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

எங்கள் கட்சியின் தலைவர் ஜெயலலிதா கொண்டுவந்த மகத் தான திட்டம் மழைநீர் சேகரிப்பு திட்டம். இத்திட்டத்தை அனைத்து கட்டிடங்களிலும் கட்டாயமாக்கி உள்ளோம். அதேபோல், பிரதமர் மோடியால் கொண்டுவரப்பட்ட அற்புதமான திட்டம் ‘தூய்மை இந்தியா’ திட்டம். இத்திட்டத்தைப் போன்று மழைநீர் சேகரிப்பு திட்டத் தையும் ஒரு தேசிய அளவிலான இயக்கமாக செயல்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.

தமிழகத்தில் நீர்நிலைகளை பொதுமக்களின் உதவியோடு பாதுகாக்கும் குடிமராமத்து திட்டம் சிறந்த முறையில் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ரூ.500 கோடி செலவில் தமிழகம் முழுவதும் 1,600 நீர்நிலை கள் தூர்வாரப்பட்டுள்ளன. கோதாவாரி - காவிரி இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் ஆந்திராவில் ராயலசீமாவில் உள்ள வறண்ட பகுதிகளும் நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் வசதிகள் பெறும்.

அடிக்கடி வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு சிறப்பு நிதியாக ஆண்டுக்கு ரூ.1,000 கோடி நிதியுதவி வழங்க வேண்டும். வேளாண் வளர்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டுப் பணி களுக்காக ராமநாதபுரம், விருது நகர் மாவட்டங்களுக்கு தலா ரூ.100 கோடி ஒதுக்க வேண்டும். மேலும் அந்த இரு மாவட்டங் களிலும் மருத்துவ கல்லூரிகள் தொடங்கவும் மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

நுண்ணீர் பாசனத்தை சிறப்பாக செயல்படுத்த வசதியாக அதற்குப் பயன்படுத்தப்படும் சாதனங் களுக்கு தற்போது வசூலிக்கப்பட்டு வரும் 12% ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும். தமிழக அரசு தலைவாச லில் ரூ.496 கோடி செலவில் ஆசியா விலேயே மிகப்பெரிய கால்நடை வளர்ச்சி பூங்கா ஒன்றை அமைக் கும் பணியில் மும்முரமாக ஈடு பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு 50% நிதியை தர வேண்டு கிறோம். பொது விநியோக திட்டத் தின் ஏழை எளிய மக்களுக்கு வழங் கப்படும் பாமாயில் மற்றும் உயர் தர மண்ணெண்ணெய்க்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றார். காவிரியில் உரிய நீரை பெற நடவடிக்கை

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்கள் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:

கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக பிரதமர் அல்லது கர்நாடக முதல்வரிடம் பேசியுள்ளீர்களா?

எங்களைப் பொறுத்தவரை ஆணையத்தில் தெரி வித்துள்ளோம். ஆணையத்தின் கட்டுப்பாட்டில்தான் தண்ணீர் பெறுகிறோம். எந்த ஒரு சூழலிலும் ஆணையம் அமைக்கப்பட்ட பின் தன்னிச்சையாக வழங்குவதை எதிர்பார்க்க முடியாது. ஆணையத் தின் வழியாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் நமக்கு வழங்க வேண்டிய பங்கு நீரை மாதம் தோறும் கர்நாடக அரசு வழங்க வேண்டும். அந்த அடிப்படையில்தான் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வழங்குவார்கள் என்று எதிர் பார்க்கிறோம். அதற்கான நடவடிக்கையை தொடர்ந்து அரசு மேற்கொள்ளும்.

மும்மொழிக்கொள்கை, ஹைட்ரோ கார்பன் பற்றி பேசினீர்களா?

ஹைட்ரோ கார்பன் திட்டம் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. தற்போது நாங்கள் அதை நிறுத்தி வைத்துள்ளோம். அனுமதியளிக்கவில்லை. மும்மொழிக்கொள்கை என்பது கிடையாது. அதை ஏற்கெனவே மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

கர்நாடக முதல்வர் மத்திய அமைச்சரைப் பார்க்கும்போது, மேகேதாட்டு விவகாரத்தில் தமிழகத்துக்கு எந்த உரிமையும் கிடையாது என்று கூறியுள்ளாரே?

அவர் பேசியது எனக்கு தெரியாது. நமது கோரிக்கையை வைத்துள்ளோம். மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அளித்த அனுமதியை திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய நீர்வளத் துறை அமைச்சரை கேட்டுக் கொண்டுள்ளோம். பிரதமரிடமும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் குறித்து?

கேட்பது நமது கடமை; கொடுப்பது அவர்கள் விருப்பம். மத்திய அரசு அறிவிப்பின் அடிப்படையில், பின்தங்கிய பகுதியாக இருப்பதால் அப்பகுதி மக்களுக்கு சிகிச்சைக்காகவும், மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில்வதற்காகவும் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கேட்டுள்ளோம். தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x