

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது என பாஜக தெரிவித்துள்ளது.
பாஜக-சிவ சேனை கூட்டணி நேற்று முறிந்தது. இதனையடுத்து அங்கு, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பாஜக கூட்டணி அமைக்கலாம் என பரவலாக பேசப்பட்டது.
இது குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறுகையில்: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி கிடையாது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பின்னடைவுக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே சரிசமமாக காரணம்.
தேர்தலுக்குப் பின்னர் இந்த இரண்டு கட்சிகளுமே தடம் தெரியாமல் போகும். எனவே, தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் கிடையாது" என்றார்.