

உத்தராகண்ட் மாநில கிராமப் பகுதி களில் சுமார் 6 ஆயிரம் குழந்தைகள் ‘108 ஆம்புலன்ஸ்’ வேன்களில் பிறந்துள்ளன. கிராமப்புறங்களில் மருத்துவமனைகள் குறைவாக இருப்பதே இதற்கு காரணம்.
உத்தராகண்ட் மாநிலத்தின் பெரும்பாலான இடங்கள் மலைப் பகுதி என்பதால் வாகனங்கள் மெதுவாக செல்லும் நிலை உள்ளது. மேலும், அம்மாநிலத் தில் ஆரம்ப சுகாதார நிலையங் கள் மற்றும் அரசு மருத்துவமனை களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
எனவே கிராமப்புறங்களில் இருந்து பெண்கள் பிரசவத்துக் காக மருத்துவமனைகளுக்கு 108 ஆம்புலன்ஸ்களில் அழைத்துச் செல்லப்படும்போது அந்த வேன்களிலேயே குழந்தைகள் பிறந்து விடுகின்றன.
உத்தராகண்ட்டில் 108 ஆம் புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்ட 2008-ம் ஆண்டு முதல் இப்போது வரை, சுமார் 6000 குழந்தைகள் ஆம்புலன்ஸ்களில் பிறந்துள்ளன.
சமேலி மாவட்ட கலெக்டர் எஸ்.ஏ.முருகேசன் இது குறித்து தி இந்துவிடம் கூறுகையில், ‘ உத்தராகண்ட்டில் கிராமங்கள் மிகவும் சிறியவை. ஒரு கிராமத்தில் வெறும் இருபது குடும்பங்கள் கூட இருக்கும். இதனால், ஒருசில கிராமங்களுக்கு சேர்த்து ஓர் ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனை இருக்கும். இங்கு போய் சேர நேரம் அதிகமாகும் என்பதால் கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்காக குறிக்கப்படும் தேதிக்கு முன்பாகவே மருத்துவ மனைகளில் வந்து சேரும்படி அறி வுறுத்தி வருகிறோம். எனினும் பிரசவ வலி வந்த பிறகு மருத்துவ மனைகளுக்கு செல்ல தொடங்கு வதால் பிரச்சினை ஏற்படுகிறது’ எனத் தெரிவித்தார்.
இதற்காக உத்தராகண்ட் அரசு, கிராமப் பகுதிகளில் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு வரு கின்றது. மற்றொருபுறம் 108 ஆம் புலன்ஸ்களில் மருத்துவ வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன என்று முருகேசன் கூறினார். நன்கு பயிற்சி பெற்றவர்கள்தான் ஆம் புலன்ஸ்களின் மருத்துசேவை யில் பணியமர்த்தப்படுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் சுமார் 40 சதவீத குழந்தைகள் ஆம்புலன்ஸ்களில் பிறக்கின்றன. கடந்த ஆண்டு 1220 குழந்தை கள் ஆம்புலன்ஸ்களில் பிறந்துள்ளன.