

பிஹாரில் காணாமல் போன ஒரு ரயில் வேறொரு ரயில்வே கோட்டத்திலிருந்தது 17 நாட்களுக் குப் பிறகு கண்டுபிடிக்கப்பட் டுள்ளது.
இதுகுறித்து, சமஸ்திபூர் ரயில்வே கோட்ட மேலாளர் அருண் மாலிக் கூறியதாவது:
கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி ஹாஜிபூர் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது. இதையடுத்து அவ்வழியாக செல்ல இருந்த ரயில்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டன. கோரக்பூர்-முசாபர்பூர் இடையி லான பயணிகள் ரயில் மாற்றுப் பாதையில் சென்றது. அன்று இரவு முதல் இந்த ரயில் காணாமல் போனது. ரயில் ஓட்டுநரும் தொடர்பு கொள்ளவில்லை. இந்நிலை யில், இந்த ரயில் வேறொரு கோட்டத்துக்குட்பட்ட ரயில் நிலையத்தில் இருந்தது. கண்டு பிடிக்கப்பட்டது என மாலிக் தெரிவித்தார்.