

மூன்றாம் பாலினத்தை அங்கீ கரித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் விளக்கம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
ஆண், பெண் அல்லாத மூன்றாம் பாலினத்தை அங்கீகரித்து கடந்த ஏப்ரல் 15-ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவில் விளக்கம் கேட்டு மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
ஆண், பெண் அல்லாத மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வர்களில் சிலர் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த வர்களாக உள்ளனர். அவர்கள் ஏற்ெகனவே அந்த சலுகை களைப் பெற்று வருகின்றனர். இந்நிலை யில்,அவர்களை இதர பிற்படுத் தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தால் பிரச்னை ஏற்படும்.
அவர்கள் மற்ற பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தால், அவர்களை இதர பிற்படுத்தப் பட்டோர் பிரிவில் சேர்ப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் இதில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்தான் முடிவெடுக்க வேண்டும்.
மேலும் மூன்றாம் பாலின உத்தரவு தகாத உறவு கொள் பவர்கள், தன் பாலின சேர்க்கை, இரு பாலின சேர்க்கை பழக்கம் உள்ளவர்களுக்கு பொருந்தாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பிரிவுகள் குறித்து விரிவான விளக்கம் தேவை. இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.