

பெண் குழந்தைகள் கருவிலேயே கலைக்கப்படுவதை தடுக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு மெத்தனமாக இருப்பதாக உச்ச நீதிமன்றம் நேற்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஆண்கள் பெண்கள் எண்ணிக்கையில் உள்ள வேறு பாடு வேகமாக அதிகரித்து வரு கிறது. பெண் குழந்தைகள் கருவி லேயே கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்படுவதே இதற்கு முக்கி யக் காரணம். இது தொடர் பாக உரிய நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டுமென்று பஞ் சாபை சேர்ந்த சமூகநல அமைப்பு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்தது.
இந்த மனு நீதிபதி தீபிகா மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் சிசு கலைப்பை தடுக்கவும், கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை கண்டறிவதை தடுக்கவும் என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டீர்கள் என்பதை தெரிவிக்க வேண்டுமென மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.
சட்டங்களை இயற்றுவது மட்டும் அரசின் கடமை அல்ல அதனை முறையாக செயல்படுத்துவதும் மத்திய அரசின் கடமைதான் என்று நீதிபதிகள் சுட்டிக் காட்டினர்.
தங்கள் மாநிலத்தில் பெண் சிசு கலைப்பை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று மாநில சுகாதாரத் துறை செயலர்கள் ஒரு மாதத்தில் பதில் மனு தாக்கல் வேண்டுமென்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர். மழையால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு காஷ்மீருக்கு மட்டும் கூடுதலாக 2 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 6 வயதுக் குட்பட்ட குழந்தைகளில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகளே உள்ளனர். 2001-ம் ஆண்டு இந்த விகிதம் 1000-க்கு 927 என்று இருந்தது.