Last Updated : 28 Mar, 2018 12:48 PM

 

Published : 28 Mar 2018 12:48 PM
Last Updated : 28 Mar 2018 12:48 PM

17 நாள் மரணப் போராட்டத்திற்குப் பின் உயிரிழந்த விமானி

கடலோர காவல்படை ஹெலிகாப்டரின் இணை விமானி, ராய்காட் மாவட்டத்திற்கு அருகே தரையிறங்கி விபத்துக்குள்ளானதில் 17 நாட்கள் வாழ்க்கைப் போராட்டத்திற்கு உயிரிழந்தார்.

உதவி கமாண்டன்ட் கேப்டன் பென்னி சௌத்ரி, கடற்படை ஹெலிகாப்டர் சேதக் ஹெலிகாப்டரின் இணை விமானியாக பணியாற்றி வந்தவர். இவர் கடந்த 10ம் தேதி விமானப் பயிற்சியில் ஈடுபட்டபோது ராய்காட் மாவட்டத்தின் முருட் அருகே ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்தார்.

ஹெலிகாப்டரின் இறக்கைகள் மோதியதில் கேப்டன் சௌத்ரியின் தலையின் உள்ளுக்குள்ளேயே இரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் மிகவும் பாதிக்கப்பட்டார்.

தலையில் ஏற்பட்ட காயத்தினால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தால்தான் உயிர்வாழ முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் உடல்நலம் மேலும் குன்றியிருந்தது. 17 நாட்கள் ஜீவமரணப் போராட்டத்திற்குப் பிறகு இணை விமானி பென்னி சவுத்ரி நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்தார்.

என்ன நடந்தது?

கடற்படை விமானிகள் தினமும் விமானம் மற்றும் ஹெலிகாப்டர் பயிற்சிகளில் ஈடுபடுவது வழக்கம்.

சம்பவத்தன்று, வழக்கமான நடைமுறைகளுடன் புறப்பட்ட ஹெலிகாப்டரில் அன்று விபத்து ஏற்படும்போது, துணை கமாண்டண்ட் பல்வீந்தர் சிங், உதவி கமாண்டண்ட் சவுத்ரி மற்றும் இரண்டு ஓட்டுநர்கள் சந்தீப் மற்றும் பல்ஜீத் ஆகியோரும் இருந்தனர்.

மோதி தரையிறங்கிய ஹெலிகாப்டரிலிருந்து முதலில் கேப்டன் சவுத்ரி இறங்கினார். ஆனால், மெதுவாக சுழன்றுகொண்டிருந்த ஹெலிகாப்டரின் இறக்கைகளில் ஒன்று துரதிஷ்டவசமாக அவரின் ஹெல்மெட்டை தாக்கிவிட்டுச் சென்றது.

ஹெலிகாப்டர் பறந்துகொண்டிருந்தபோதே நடுவானில் என்ஜினுக்கு வரும் காற்று அடைத்துக்கொண்டது. கடலில் விழுந்துவிடாமல் தடுப்பதற்காக விமானியும் இணை விமானியும் கரைப்பகுதியிலேயே ஹெலிகாட்ரை முன்னோக்கி சறுக்கிச்சென்று தரையிறக்குவதற்காக வேகத்தைக் குறைத்தனர்.

கடற்கரையின் மணல் பகுதியிடமாகப் பார்த்து ஹெலிகாப்டரை தரையிறக்க முயன்றுள்ளனர். ஆனால் அப்படி செய்யமுடியவில்லை. அது நாடக்ராம் கடற்கரையில் ஒரு பாறைகள்நிறைந்த பகுதியில் இறங்கியது.

இந்நிலையில் தெற்கு மும்பையின் கொலாபா பகுதியில் அமைந்துள்ள கடற்படை மருத்துவமனை ஐஎன்எச்எஸ் அஸ்வினியில் அனுமதிக்கப்பட்டார்.

''நேற்று (செவ்வாய்க்கிழமை) அவர் இறந்துவிட்டார்'' என்ற செய்தியை கடலோர பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் மேற்கு கமாண்டேட் அவிநந்தன் மித்ரா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x