Last Updated : 01 Mar, 2018 02:48 PM

 

Published : 01 Mar 2018 02:48 PM
Last Updated : 01 Mar 2018 02:48 PM

நிரவ் மோடி வழக்கு: பஞ்சாப் நேஷனல் வங்கி ஆடிட்டர் கைது

ரூ.12,600 கோடி வங்கி மோசடி வழக்கில் விசாரணை நடத்திவரும் சிபிஐ பஞ்சாப் நேஷனல் வங்கி மும்பைக் கிளையின் தலைமை ஆடிட்டரை நேற்று கைது செய்தது.

இது குறித்து சிபிஐ அதிகாரிகள் தெரிவித்ததாவது:

நிரவ் மோடி நிறுவனங்கள் மற்றும் கீதாஞ்சலி குரூப் நிறுவனங்கள் தொடர்பான வழங்குகளின் விசாரணையில், பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமை ஆடிட்டரை நேற்று (புதன் கிழமை) கைது செய்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

கைது செய்ப்பட்ட பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமை ஆடிட்டர் எம்.கே.சர்மா இவ்வங்கியின் தலைமை மேலாளர் பதவிக்கு இணையான பதவி வகிப்பவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மும்பை சர்மா பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை, பிராடி ஹவுஸ் கிளையின் கணக்குவழக்குகளை தணிக்கை செய்வதற்கு முழு பொறுப்பு அதிகாரியாக பணியாற்றி வருவபவர். சர்மா கைது குறித்து மண்டல தணிக்கை அலுவலகத்திற்கும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இன்று மும்பையில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் சர்மா ஆஜர்படுத்தப்படுவார்''

இவ்வாறு சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

வைர வியாபாரி மோடி மற்றும் கீதாஞ்சலி ஜெம்ஸ் உரிமையாளர் மெஹுல் சோக்ஸி ஆகியோருக்கு பி.என்.பி 12,600 கோடி ரூபாயை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. திங்கட்கிழமை இரவு ரூ.1,300 கோடி ரூபாய் கூட்டுசதியில் ஈடுபட்டனர். முன்னதாக, வங்கிக்கணக்குப்படி ரூ.11,300 கோடியாக இருந்தது.

சிபிஐ, நிரவ் மோடி, அவரது மனைவி அமி, சகோதரர் நிஷா, மாமா சோக்ஸி மற்றும் அவரது நிறுவனங்கள் டயமண்ட் ஆர் யுஎஸ், சோலார் எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்டெல்லார் டயமண்ட் ஆகியவற்றிற்கு எதிராக பிப்ரவரி 14 ம் தேதி எப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

இந்த மோசடி சுமார் 6,400 கோடி ரூபாய் அளவுக்கு நடந்துள்ளது. ஜனவரி மாதத்தில் மோடி, அவரது குடும்பம் மற்றும் சோக்ஸி நாட்டை விட்டு வெளியேறினர்.

சோக்சியின் கீதாஞ்சலி குழுமம் ரூ. 4,886.72 கோடி மோசடியில் ஈடுபட்டதாக பிப்ரவரி 15ஆம்தேதி, சிபிஐ இரண்டாவது வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ. 6,000 கோடி மதிப்புள்ள சொத்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x