

டெல்லியில் ஆட்சி அமைக்கக் கோரி பாரதிய ஜனதா கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, துணை நிலை ஆளுநர் குடியரசுத் தலைவரிடம் அனுமதி கோரியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி சட்டமன்றத்தில் ஜன்லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாததால் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி 49 நாட்களில் முடிவுக்கு வந்தது. இதனால், டெல்லி அரசு கலைக்கப்பட்டது. மறுதேர்தல் அறிவிக்கப்படாமல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
இவ்விவகாரத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் எவ்வளவு நாள் வீணாக வீட்டில் இருப்பார்கள்? என உச்ச நீதிமன்றமும் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தது.
இந்நிலையில், டெல்லியில் ஆட்சி அமைக்கக் கோரி பாரதிய ஜனதா கட்சிக்கு அழைப்பு விடுக்க, துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் குடியரசுத் தலைவரிடம் அனுமதி கோரியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.