Last Updated : 24 Mar, 2018 05:22 PM

 

Published : 24 Mar 2018 05:22 PM
Last Updated : 24 Mar 2018 05:22 PM

தாயை இழந்த இமாலயக் கருப்பினக் கரடிக் குட்டி மீட்பு: கண்டெடுத்துக் காப்பாற்றிய சுற்றுச்சூழல் ஆர்வலர்

தாயைப் பிரிந்து ''அனாதை'' ஆகிவிட்ட கருப்பினக் கரடிக் குட்டியை மீட்டெடுத்து உணவளித்து காப்பாற்றிவந்த சுற்றுச்சூழல் ஆர்வலரை வனத்துறை அதிகாரி சந்தித்துப் பாராட்டினார். தற்போது அக்கரடிக்குட்டி சங்லாங் மாவட்டத்தின் மியா தேசியப் பூங்காவில் பாதுகாப்பாக விடப்பட்டுள்ளது.

''அனாதை''யான இமாலயக் கருப்பினக் கரடிக் குட்டி மீட்டெடுக்கப்பட்டவிவரம்:

அருணாசலப் பிரதேசத்தில் இந்தியா பர்மா எல்லைப் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் சுற்றுச்சூழல் ஆர்வலர் யாங்கோக் ஹடாங் பயணம் மேற்கொண்டிருந்தார்.

கண்களுக்கு எட்டியத் தொலைவில் எந்தவித உயிரினங்களும் தென்படாமல் ஒரே ஒரு கரடிக்குட்டி பசியால் தவித்து அலைந்துகொண்டிருந்ததைக் கண்டார்.

கரடிக் குட்டியின் தாயை எங்குமே காணாத நிலையில், தானே கொண்டுசெல்வதென முடிவெடுத்து கரடிக் குட்டியை தனது வீட்டுக்கு எடுத்து வந்தார்.

டிராப் மாவட்டத்தில் லாசு பகுதியில் அவரது வீடு இருந்தது.

யாங்கோக் ஹடாங் என்பவர் தாயைப் பிரிந்து ஆதரவற்று ''அனாதை''யாகத் திரிந்த கரடிக் குட்டிக்கு தேவையான உணவளித்து காப்பாற்றினார்.

யாங்கோக் வீட்டில் கரடிக்குட்டி யாங்கோக் வீட்டில் விருந்தினராக இருந்த காலங்களில் அங்கு வந்து அடிக்கடி வந்து பார்த்துவிட்டுச் சென்ற கிராமவாசிகள் அதற்கு ஓலோ என அன்பாக பெயர்சூட்டி மகிழ்ந்தனர்.

யாங்கோக் இரண்டு மாதம் கழித்து யாங்கோக் லாசுப் பகுதியின் வனத்துறை அதிகாரி ஹாங்பாங் டெஸியாவிடம் கரடிக்குட்டியை ஒப்படைத்தார்.

மாவட்ட வனத்துறை அலுவலர் பிட்டெம் டராங், கரடிக்குட்டியை மீட்டெடுத்துக் காப்பாற்றிய யாங்கோக்வின் முயற்சிகளைப் பாராட்டினார். மேலும் இந்த கரடிக்குட்டி சிறப்புக்கவனம் செலுத்தி முறையாக பேணி பாதுகாக்கப்படும் என்றும் அவரிடம் உறுதியளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x