

மக்களவை நன்னெறிக் குழுவின் தலைவராக பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி நியமிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் இதற்கான நியமன உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கடந்த 15-வது மக்களவையின் நன்னெறிக் குழு தலைவராக காங்கிரஸ் கட்சியின் மாணிக்ராவ் காவிட் இருந்தார்.
இக்குழு உறுப்பினர்களாக, ஏ.அருண்மொழித் தேவன், நினோங் எரிங், ஷேர் சிங் குபாயா, ஹேமந்த் துக்காராம் கோட்சே, பிரஹலாத் ஜோஷி, பகத்சிங் கோஷ்யாரி, அர்ஜுன் ராம் மேக்வால், பரத்ருஹரி மஹ்தாப், கரியா முண்டா, ஜெய்ஸ்ரீபென் படேல், மல்லா ரெட்டி, சுமேதானந்த் சரஸ்வதி, போலா சிங் ஆகியோர் உள்ளனர்.
சாந்த குமார் தலைமையிலான பொது விவாகாரங்கள் குழு உறுப்பினராகவும், அனுராக் தாகுர் தலைமையிலான தகவல் தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினராகவும் அத்வானி உள்ளார்.
மக்களவை மதிப்பீட்டுக் குழு உறுப்பினராக, பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்புக் குழுவின் தலைவராக மேஜர் ஜெனரல் பி.சி கந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார்.