

பாரதிய ஜனதா பிரதமர் வேட் பாளர் நரேந்திர மோடி தன் மனைவி யசோதா பென் குறித்து வெளிப்படையாக அறிவித் துள்ளதற்கு தேர்தல் தொடர் பான வழக்கு ஒன்றில் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பே காரணமாக அமைந்துள்ளது. திருமண மாகாதவர் என்று நீண்டகாலமாக கருதப்பட்ட, பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, சில தினங்களுக்கு முன் வதோதராவில் தாக்கல் செய்த வேட்புமனுவில் தன் மனைவி பெயர் யசோதா பென் என்று குறிப்பிட்டிருந்தார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர் பாக காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளன.
நிர்பந்தம் உருவானது
இந்த உண்மையை அதிகாரப் பூர்வமாக அவர் அறிவிக்க வேண்டிய நிர்பந்தம் உரு வானதற்கு, உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி பிறப்பித்த தீர்ப்பே காரணம்.
“ரீசர்ஜன்ஸ் இந்தியா” என்ற அமைப்பு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “தேர்தலில் போட்டியிடும் வேட் பாளர்கள் முக்கிய விவரங்களை தெரிவிக்காமல் காலியிடமாக விட்டு விடுகின்றனர். அத்தகைய மனுக்களை நிராகரிக்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப் பிட்டிருந்தது.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சனா பிரகாஷ் தேசாய், ரஞ்சன கோகோய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் ஆஜராகி வாதாடினார்.
மனுதாரரின் நியாயத்தை ஏற்றுக் கொண்ட தேர்தல் கமிஷன், “வேட்புமனு முழுமையாக நிரப்பப்படாமல் இருந்தால், அதை நிராகரிக்க சட்டத்தில் இடமுண்டு. ஆனால், தெரிவிக்கப்படாத விவரங்கள் குறித்து விசாரிப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. புகார்கள் வந்தால் விசாரித்து குற்றவியல் நடவடிக்கைக்கு உத்தர விடலாம்” என்று குறிப்பிட்டது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, வேட்பாளர்கள் தங்கள் விவரங்களை தெரிவிக்காமல் இருந்தால், இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும் என சுட்டிக்காட்டப்பட்டது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, “வேட்பாளர் குறித்த விவரங்களை அறிந்து கொள்வது வாக்காளரின் அடிப்படை உரிமை. எனவே, வேட்புமனுவில் முக்கிய விவரங்கள் குறிப்பிடப்படாமல் காலியாக இருந்தால், அது செல்லாததற்கு சமம். அதை தேர்தல் அதிகாரி நிராகரிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.
மனைவி குறித்த விவரம்
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, 2002, 2007, 2012 ஆகிய ஆண்டுகளில் நடந்த மூன்று சட்டமன்றத் தேர்தல்களிலும் மனைவி பற்றிய விவரங்களை வெளியிடாமல் வேட்புமனுவை காலியாக விட்டிருந்தார்.
பாஜ வெற்றி பெற்றால் அடுத்த பிரதமர் என்று முன்மொழியப்பட்டு வரும் நிலையில், வேட்புமனு சர்ச்சை முட்டுக்கட்டையாகி விடக் கூடாது என்பதற்காகவே மோடி தன் மனைவி குறித்த விவரத்தை இப்போது தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள தாகக் கூறப்படுகிறது. அதற்கு வழிவகுத்த உச்சநீதிமன்ற தீர்ப்பும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.