

மத்திய நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நீரிழிவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவருக்கு கடந்த சில நாட்களக்கு முன்னர் மேக்ஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பரிசோதனைக்காக அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பரிசோதனை முடிந்து அவர் நாளை (செவ்வாய்க்கிழமை) வீடு திரும்புவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.