

கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி கன்னட நடிகை மைத்ரி கவுடா, கார்த்திக் கவுடா தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என போலீஸில் புகார் அளித்தார்.
தலைமறைவாக உள்ள கார்த்திக் சார்பாக அவரது வழக்கறிஞர் உமேஷ் பெங்களூர் மாநகர 8-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தார். அதில், “நடிகை மைத்ரி கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. ஆதலால் தனக்கு விதிக்கப்பட்ட பிடிவாரண்ட்டை ரத்து செய்ய வேண்டும். மேலும் இவ்வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும்” என கோரி இருந்தார். இம்மனு மீது சனிக்கிழமை தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி முடிகவுடர் அறிவித்தார்.
'கார்த்திக் மனநிலை சரியில்லாதவன்'
நடிகை மைத்ரி சதானந்த கவுடாவின் மனைவி தாத்தியிடம் பேசும் ஆடியோ வெளியாகி இருக்கிறது. அதில் தாத்தி, “எனது மகனை மறந்து விடு. அவன் கெட்டவன், மனநிலை சரியில்லாதவன். அவனுக்கு பல பெண்களோடு தொடர்பு இருக்கிறது. ஆதலால் உன்னை மருமகளாக ஏற்க முடியாது” என கூறியுள்ளார்.