பிரதமர் மோடியுடன் தெலங்கானா முதல்வர் சந்திப்பு: சர்ச்சைக்குரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து விளக்கம்

பிரதமர் மோடியுடன் தெலங்கானா முதல்வர் சந்திப்பு: சர்ச்சைக்குரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து விளக்கம்
Updated on
1 min read

தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் பிரதமர் நரேந்திர மோடியை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது தெலங்கானாவில் சமீபத்தில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பிரதமரிடம் விளக்கம் அளித்தததாகக் கூறப்படுகிறது.

சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த சந்திப்பின்போது தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியின் எம்.பி.க்கள் உடனிருந்தனர். பின்னர் மாநிலங்களவை எம்பி கே.கேசவ ராவ் கூறியதாவது:

மாநிலத்தில் மொத்தம் 80 லட்சம் குடும்பங்கள் உள்ளன. ஆனால், 1.2 கோடி ரேஷன் அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. இதற்கான பின்னணியைக் கண்டறி வதற்காகவே கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மற்றபடி வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் இந்த கணக்கெடுப்பால் கிடைக்கும் பயன் குறித்தும் பிரதமரிடம் விளக்கினோம்.

ஹைதராபாதின் வடக்குப் பகுதியில் மேலும் ஒரு விமான நிலையம் அமைக்க வேண்டும் என்றும் பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளோம் என அவர் தெரிவித்தார்.

மேலும் மின்சார பற்றாக்குறை முதல் கல்வி நிறுவனங்களை நிறுவுவது உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் பிரதமருடன் ஆலோசனை நடத்தியதாக தெலங்கா னாவுக்கான டெல்லி சிறப்பு பிரதிநிதி வேணுகோபாலாச்சாரி தெரிவித்தார்.

டிஆர்எஸ் தலைமையிலான அரசு தெலங்கானா முழுவதும் கடந்த மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியது. மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

தெலங்கானாவில் வசித்து வரும் தங்களை அடையாளம் காண்பதற்காகவே இந்த கணக் கெடுப்பு நடத்தப்பட்டதாக சீமாந்திரா மக்கள் அச்சம் தெரிவித் தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in