Published : 06 Mar 2018 09:02 am

Updated : 06 Mar 2018 09:02 am

 

Published : 06 Mar 2018 09:02 AM
Last Updated : 06 Mar 2018 09:02 AM

உத்தரபிரதேச மேலவை, மாநிலங்களவை தேர்தலில் மாயாவதி - அகிலேஷ் இடையே உடன்படிக்கை

உ.பி. மேலவை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் அகிலேஷ்சிங் யாதவின் சமாஜ்வாதி கட்சி இடையே உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. உ.பி. அரசியலில் இது முக்கியத் திருப்பமாக கருதப்படுகிறது.

கடந்த 2014 மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி, எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சி அளித்தது. இதையடுத்து பிரதமர் மோடியின் செல்வாக்கை முறியடிக்க எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என குரல்கள் எழுந்தன. என்றாலும் பகுஜன் சமாஜ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் நிலைப்பாட்டால் இந்த முயற்சி இதுவரை வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் உ.பி.யில் காலியாகும் 10 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வரும் 23-ல் தேர்தல் நடைபெறுகிறது. உ.பி. மேலவைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி நேற்று முன்தினம் விடுத்த அறிக்கையில், “எங்கள் கட்சிக்கு உ.பி.யில் 17 எம்எல்ஏக்கள் உள்ளனர். மாநிலங்களவையில் நாங்கள் ஓர் உறுப்பினர் பெறுவதற்கு சமாஜ்வாதி எங்களுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளது. இதற்கு பதிலாக உ.பி. மேலவை தேர்தலில் நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிப்போம். எங்கள் கட்சி யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. மக்களவை தேர்தலில் சமாஜ்வாதியுடன் கூட்டணி என்பதும் பொய்” என்று தெரிவித்துள்ளார்.

கோரக்பூர், பூல்பூர் மக்களவை தொகுதிகளுக்கு வரும் 11-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இங்கு மாயாவதி தனது வேட்பாளர்களை நிறுத்தவில்லை. என்றாலும் பாஜகவை தோற்கடிக்கும் வலிமை கொண்ட வேட்பாளர்களுக்கு தனது கட்சியினர் வாக்களிப்பார்கள் என்று நேற்று முன்தினம் கூறினார். இதையடுத்து சமாஜ்வாதி வேட்பாளர்களுக்கு பகுஜன் சமாஜ் உள்ளூர் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர். மேலும் சமாஜ்வாதி பிரச்சார மேடைகளிலும் இடம்பெறத் தொடங்கினர்.

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஸ்ரீகாந்த் சர்மா நேற்று கூறும்போது, “சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் மக்களால் நிராகரிக்கப்பட்டதால் ஏமாற்றம் காரணமாக ஒன்று சேர்ந்துள்ளனர். இந்த உடன்பாடு தனிப்பட்ட நலனுக்கானது. இதில் மக்கள் நலன் எதுவுமில்லை” என்றார்.

உ.பி.யின் முக்கிய எதிர்கட்சிகளான இவ்விரு கட்சிகளும் இணைவது பாஜகவுக்கு ஆபத்தானதாக கருதப்படுகிறது. இவர்களுடன் காங்கிரஸும் இணைந்தால் உ.பி.யில் பாஜகவின் தோல்வி உறுதியாக வாய்ப்புள்ளது. மக்களவை தேர்தலில் தனக்கு கிடைக்கும் தொகுதிகளை பொறுத்து அக்கூட்டணியில் சேர மாயாவதி முடிவு செய்வார் எனத் தெரிகிறது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author