

திருப்பதியில் 60 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான திட்ட அறிக்கையை திருப்பதி நகர வளர்ச்சி கழக அதிகாரிகள் அரசுக்கு தாக்கல் செய்தனர்.
ஆந்திர மாநிலத்தில் திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய 3 நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் அமைக்க அரசு முடிவு செய்தது. இதற்காக டில்லி மெட்ரோ ரயில் திட்ட முன்னாள் அதிகாரியான ஸ்ரீதரனை, ஆந்திரா வின் மெட்ரோ ரயில் திட்ட ஆலோச கராக அரசு நியமித்துள்ளது. இவர் தற்போது விஜயவாடா- குண்டூர்-தெனாலி-மங்களகிரி இடையேயான மெட்ரோ ரயில் திட்டத்துக்கான இடங்களை பரிசீலித்து வருகிறார்.
இந்நிலையில், திருப்பதி நகர வளர்ச்சி கழக அதிகாரிகள், திருப் பதியில் மெட்ரோ ரயில் திட்டம் குறித்த வரைபடத்தை தயாரித்து, அறிக்கையை அரசுக்கு வழங்கி உள்ளனர். இந்த அறிக்கையில், ரேணிகுண்டா விமான நிலையத்தில் தொடங்கி திருச்சானூர், திருப்பதி அரசு பஸ் நிலையம், பத்மாவதி மகளிர் பல்கலைக் கழகம், ஸ்ரீநிவாச மங்காபுரம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் வழியாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா, அலிபிரி, கபில தீர்த்தம், ரேணிகுண்டா விமான நிலையம் வரை வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.