Last Updated : 06 Mar, 2018 11:09 AM

 

Published : 06 Mar 2018 11:09 AM
Last Updated : 06 Mar 2018 11:09 AM

திரிபுராவில் லெனின் சிலை அகற்றம்: பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல்

திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில்  பாஜக வெற்றி பெற்று 48 மணி நேரத்துக்குள் அங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் நிறுவப்பட்ட லெனின் சிலை அகற்றப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளன.

திரிபுராவில் பெலோனியா கல்லூரி சதுக்கத்திலுள்ள கம்யூனிஸ்ட் புரட்சியாளர் லெனின் சிலையை ஜேசிபி இயந்திரத்தை கொண்டு வலது சாரி ஆதரவாளர்கள் அகற்றும் வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோ காட்சியில் லெனின் சிலை அகற்றப்படும்போது அங்கு கூடியிருந்தவர்கள் பாரத் மாதா கி ஜெய் என்ற கோஷமிடுகின்றனர்.

மேலும் திரிபுராவில் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கன்யூனிஸ்ட் கட்சி அலுவலங்கள் தாக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

சிலை அகற்றம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலங்கள் தாக்கப்பட்டுள்ளதற்கு அக்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் பாஜகவினரே இதற்கு காரணம் என்று குற்றச்சாட்டியுள்ளனர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது.

திரிபுராவில் வலதுசாரி ஆதாரவாளர்களின் இந்த வன்முறை காரணமாக பதற்றம் நிலவி வருகிறது. இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக  மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

திரிபுரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் மக்கள் முன்னணி கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக 43 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பாஜக 35 இடங்களையும், திரிபுரா மக்கள் முன்னணி கட்சி 8 இடங்களையும் கைப்பற்றியது.

கடந்த 25 ஆண்டுகளாக திரிபுரா மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி படுதோல்வியைச் சந்தித்து ஆட்சியை தாரைவார்த்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x