

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 277-ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் பெய்த கனமழை, அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கின.
தேசியப் பேரிடராக அறிவிக்கப்பட்டு மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட 41,000 மக்கள் 87 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
காஷ்மீரில் கடந்த இரு வாரங்களாக நீடித்த கனமழை வெள்ளத்தால் ரூ.60 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில தொழில் வர்த்தக சம்மேளனம் கூறியுள்ளது.
இந்நிலையில், பலியானோர் எண்ணிக்கை 277-ஆக அதிகரித்துள்ளதாக அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.