Published : 13 Mar 2018 09:33 AM
Last Updated : 13 Mar 2018 09:33 AM

ம.பி.யில் 150 அடி ஆழ ஆழ்துளை கிணறில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு

மத்தியபிரதேச மாநிலம் உமரியா என்ற கிராமத்தில் வயலில் ஆழ்துளைக் கிணறு ஒன்று மூடப்படாமல் இருந்தது. சனிக்கிழமை காலை அங்கு விளையாடிக்கொண்டிருந்த ரோஷன் என்ற 4 வயது சிறுவன் கிணற்றில் தவறி விழுந்தான். இதையடுத்து மீட்புப் பணிக்கு ராணுவம் வரவழைக்கப்பட்டது. 150 அடி ஆழு கிணற்றில், 30 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ஆழ்துளைக் கிணற்றில் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது. மேலிருந்து பெற்றோர் பேச்சு கொடுத்தபோது சிறுவன் பதில் அளித்து வந்தான். அவனுக்கு குழாய் மூலம் திரவ உணவும் தரப்பட்டது.

பின்னர் சுறுக்கு கயிறு ஒன்று குழாய்க்குள் விடப்பட்டு அதை கையில் இறுக்கிக் கொள்ளுமாறு சிறுவனிடம் கூறப்பட்டது. இந்த முயற்சியில் மேலிருந்து கூறியதை சிறுவன் சரியாக செய்ததால், ஞாயிற்றுக்கிழமை இரவு 10.45 மணிக்கு கிணற்றில் இருந்து மீட்கப்பட்டான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x