

பெண் வழக்கறிஞர் விஷம் குடித்த விவகாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க, பெருநகர குற்றவியில் நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம் விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
அவரது கணவரின் உறவினர் கள் சிலர் கடந்த ஆண்டு கும்ப லாக சேர்ந்து பாலியல் பலாத் காரம் செய்ததாகவும், இதுதொடர் பாக சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத் தில் அவர் தொடர்ந்த வழக்கு, விசாரணையின்றி நிலுவையில் இருப்பதால் மனமுடைந்து தற் கொலை முயற்சியில் ஈடுபட்டதா கவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இச்சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்தது.
இவ்வழக்கு தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இச்சம்பவம் குறித்து சத்தீஸ்கர் மாவட்ட தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தி, உண்மை நிலவரம் குறித்து உச்ச நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞர் விரும்பினால், டெல்லி சட்ட உதவி மையத்தை அணுகி, சட்ட உதவி பெறலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.