

ஜம்மு காஷ்மீரில் கடந்த 5 நாட்களாக ஏற்பட்ட கனமழையை தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. ரஜோரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்த செல்லப்பட்ட பேருந்தில் இருந்த 50 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இதே போல நேற்று தனாமண்டியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 14 பலியாகினர்.
இது போல மாநிலம் எங்கும் மழை மற்றும் நிலச்சரிவால் பலியானோர் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது. தேசிய நெட்ஞ்சாலைகள் உட்பட மாநிலத்தின் பல சாலைகள், பாலங்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. மீட்பு பணிகளில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
கனமழைக்கு மாநிலத்தில் உள்ள 3 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு நிலைமை சீரடைய பல மாத காலமாகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இங்குள்ள 20 கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதுவரை மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கிய 2000 மக்களை பாதுகாப்புப் படையினர் மீட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே இன்றும் பல இடங்களில் கனமழை பெய்யும் எனவும் ஞாயிறு முதல் மழையில் அளவு குறைய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.