ஆந்திர சபாநாயகரின் பேரன் கடத்தல்: கணவன் மீது மனைவி புகார்

ஆந்திர சபாநாயகரின் பேரன் கடத்தல்: கணவன் மீது மனைவி புகார்

Published on

ஆந்திர மாநில சபாநாயகரின் பேரனை, தந்தையே கடத்தினார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநில சட்டப்பேரவை சபாநாயகர் கோடெல சிவபிரசாத்ராவ். இவரது மகன் கோடெல சிவராமகிருஷ்ணா (35) இவரது மனைவி பத்மப்ரியா (30) இவர்களுக்கு கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கவுதம் (4) என்கிற மகன் உள்ளான்.

இந்நிலையில், தம்பதி களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக ஓராண்டுக்கு முன்னர் பத்மப்ரியா கணவரை விட்டு பிரிந்து தனது மகனுடன் விசாகப்பட்டினத்தில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

கடந்த புதன் கிழமை நள்ளிரவு, கோடல சிவராமகிருஷ்ணா, மாமியாரின் வீட்டிற்குள் புகுந்து தனது மகன் கவுதமை தன்னுடன் கொண்டு சென்று விட்டார்.

இது குறித்து நேற்று பத்மப்ரியா விசாகப்பட்டினம் 3-வது காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அந்த புகாரில், ‘ஆந்திர மாநில சபாநாயகர் கோடல சிவபிரசாத் ராவ் மற்றும் அவரது மனைவி, என் கணவன் ஆகியோர் திருமணம் ஆனது முதல் என்னை கொடுமை படுத்தினர். வீட்டை விட்டு துரத்தினர். அவர்களது கொடுமையை தாங்கி கொள்ள முடியாமல், என் மகனுடன் கடந்த ஆண்டு தாய் வீட்டுக்கு வந்து விட்டேன்.

ஆயினும் எனது கணவர் இங்கும் வந்து அடிக்கடி தகராறு செய்து வந்தார். தற்போது தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்த பின்னர் இவர்களது அட்டகாசம் அதிகமானது.

இந்நிலையில், புதன் கிழமை இரவு அடியாட்களுடன் வந்த எனது கணவர், என் வீட்டுக்குள் புகுந்து எனது மகனை கடத்தி சென்று விட்டார்.

போலீஸார் என் மகனை மீட்டுத் தரவேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார். இதுதொடர் பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்து கின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in