Last Updated : 25 Mar, 2018 03:05 PM

 

Published : 25 Mar 2018 03:05 PM
Last Updated : 25 Mar 2018 03:05 PM

‘ஹாய், நான்தான் நரேந்திரமோடி’.. : ராகுல் காந்தி கிண்டல் ட்விட்

நரேந்திர மோடி ஆப்ஸில் பதிவு செய்தவர்களின் விவரங்கள் அமெரிக்க நிறுவனத்துக்கு பரிமாறப்படுவதாக எழுந்த சர்ச்சையையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிண்டலாக ட்விட் செய்துள்ளார்.

பிரான்ஸ் இணையத் தகவல் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் எலியாட் ஆல்டர்சன் ட்விட்டரில் நேற்று பரபரப்பான பதிவு ஒன்றை நேற்று வெளியிட்டார். அதில் இந்திய அரசு தன்னுடைய மக்களுக்காக பிரதமர் மோடியின் பெயரில் ‘நரேந்திரமோடி ஆப்ஸ்’ என்ற பெயரில் ஒரு செயலியை அறிமுகப்படுத்தியது.

ஆனால், அந்த ஆப்ஸை பயன்படுத்தி, அதில் மக்கள் தங்களின் பெயர், வயது, பாலினம் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்யும்போது, அவர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் அவர்களின் அனுமதியின்றி அமெரிக்காவின் ‘கிளவர் டேப்’ (Clever Tap) என்ற நிறுவனத்துக்கு பரிமாறப்பட்டு வருகிறது.

இந்த தகவல்கள் அனைத்தும் in.wzrkt.com. என்ற தளத்துக்கு மாற்றப்படுகிறது. இந்த முகவரி அந்த அமெரிக்க நிறுவனத்துக்கு சொந்தமானதாகும் எனத் தெரிவித்து இருந்தார்.

ஏற்கனவே பேஸ்புக் நிறுவனத்தோடு தொடர்பு வைத்திருந்த கேம்பிரிட் அனாலிட்டிகா நிறுவனத்தின் துணையோடு காங்கிரஸ் கட்சி 2019-ம் ஆண்டு தேர்தலைச் சந்திக்க இருக்கிறது என்று பாஜக குற்றம்சாட்டி இருந்தது. இந்த சூழலில் இந்த விவகாரம் பாஜகவுக்கு பெரிய நெருக்கடியை அளித்தது.

இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்க நிறுவனத்துக்கு நரேந்திரமோடி ஆப்ஸில் பதிவு செய்துள்ள மக்களின் தனிப்பட்ட விவரங்கள் பரிமாறப்படுவதை குறிப்பிட்டு கிண்டலாக ட்விட்டரில் பதிவு வெளியிட்டார். அதில் கூறியிருப்பவாது:

ஹாய் , என்னுடைய பெயர் நரேந்திர மோடி. இந்தியாவின் பிரதமராக இருக்கிறேன். என்னுடைய பெயரில் இருக்கும், அதிகாரப்பூர்வ செயலியில் மக்களாகிய நீங்கள் பதிவு செய்யும்போது, உங்களின் அனைத்து தனிப்பட்ட விவரங்களையும் உங்களின் அனுமதியில்லாமல், என்னுடைய அமெரிக்க நண்பர்களின் நிறுவனத்துக்கு கொடுத்துவிடுவேன்.

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x