

புதுடெல்லி
பஞ்சாப் வங்கியில் ரூ.11,400 கோடி கடன் மோசடி வழக்கில் சிக்கியதை அடுத்து இந்தியாவிலிருந்து கடந்த ஜனவரியில் தப்பிச் சென்ற வைரவியாபாரி மெஹுல் சோக்ஸி தான் இந்தியா வரப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் பஞ்சாப் வங்கிக் கடன் மோசடி விவகாரம் வெடித்தவுடன் நாட்டை விட்டுத் தப்பி வெளியேறிய நிரவ் மோடி மாமா சோக்ஸி தனது தற்போதைய இருப்பிடம் குறித்து மறைத்து வருகிறார்.
பிப்ரவரி மாதம் இருதய நோய் சிகிச்சை எடுத்துக் கொண்டதால் தான் பயணிக்க முடியாது என்றும் அதாவது 4 முதல் 6 மாதங்களுக்கு தன்னை பயணிக்கக் கூடாது என்று மருத்துவர்கள் கூறியிருப்பதாகவும் அவர் காரணம் கூறியுள்ளார்.
அருகில் உள்ள இந்திய தூதரகத்தில் பயண ஆவணங்களுக்காக அவர் அணுகுவதையும் விரும்பவில்லை என்று தெரிகிறது. இது குறித்து சிபிஐயின் உத்தரவும் உள்ளது,
நிரவ் மோடி செய்த தப்பிதங்களிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் அவரது மாமா மெஹுல் சோக்ஸி அமலாக்கத்துறை தனது உரிமைகளை மீறி முன் தீர்மானிக்கப்பட்ட முடிவுகளுடன் தன்னையும் தன் நிறுவனங்களையும் இலக்காக்குகிறது என்று குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் இந்தியா திரும்பினால் தான் கைது செய்யப்படுவோம் என்றும் தன் உடல்நிலை சரியில்லாத நிலையில் கைது ஆகி அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியாது என்றும் இந்திய அரசு மருத்துவமனைகளின் தரம் தன் உடல்நிலைக்குக் கவலையளிக்கக் கூடியது என்றும் கூறியதோடு தான் இந்தியா திரும்பினால் ஊடகங்களின் வெளிச்சம் முழுதும் தன் மேல் பாயும் என்றும் அரசியல் தலைவர்களும் தன்னை சும்மா விடமாட்டார்கள் என்றும் கூறி இந்தியாவுக்கு திரும்பப் போவதில்லை என்று கூறியுள்ளார்.