Published : 08 Mar 2018 11:35 AM
Last Updated : 08 Mar 2018 11:35 AM

சர்வதேச மகளிர் தினம்: பெண் தலைவர்கள் வாழ்த்து

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, இன்று (வியாழக்கிழமை) பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பெண் தலைவர்கள் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

அவற்றின் விவரம்:

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்

"சர்வதேச மகளிர் தினத்துக்கு என் இதயபூர்வமான வாழ்த்துகள்".

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி

"பெண்களால் நாங்கள் பெருமையடைகிறோம். அவர்கள் இந்த உலகின் முதுகெலும்பு போன்றவர்கள். இந்த நாட்டில் உள்ள பெண்கள் மட்டுமல்லாமல் உலகிலுள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்".

தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி

"கனவுகளை நனவாக்கும் பயணங்களை நினைவுகூறும் தினம், சாதனைகளை கொண்டாடும் தினம், பாதையாக இருப்பவர்களுக்கு நன்றி கூறும் தினம். நம்பிக்கையூட்டும் அனைத்து பெண்களுக்கும் வாழ்த்துகள்".

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

"தமிழ்நாட்டில் உள்ள அனைத்து துறைகளிலும், இல்லங்களிலும் ஒளியேற்றிக் கொண்டிருக்கும் மகளிர் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்".

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x