Last Updated : 12 Mar, 2018 06:20 PM

 

Published : 12 Mar 2018 06:20 PM
Last Updated : 12 Mar 2018 06:20 PM

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: கார்த்தி சிதம்பரத்துக்கு 24-ம் தேதி வரை நீதிமன்ற காவல்: திஹார் சிறையில் தனி அறை கோரிக்கை நிராகரிப்பு

 

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை வரும் 24-ம் தேதிவரை திஹார் சிறையில் அடைக்க சிபிஐ நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

அதேசமயம், தான் முன்னாள் மத்திய அமைச்சரின் மகன், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பதால், சிறையில் தனி அறை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது.

ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.306 கோடி முதலீடு பெற சட்டவிரோதமாக கார்த்திசிதம்பரம் உதவியாகவும், இதற்காக 7லட்சம் அமெரிக்க டாலர் கையூட்டு பெற்றதாகவும் சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் 28-ம்தேதி சென்னை விமானத்தில் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.

அதன்பின் பல கட்டமாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். கடைசியாக 3 நாள் காவல் முடிந்து, கார்த்தி சிதம்பரத்தை இன்று நீதிமன்றத்தில் நீதிபதி சுணில் ராணா முன் சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.

அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வி.கே. சர்மா வாதிடுகையில், கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்த கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும். இதற்கு முன் சிபிஐ காவலில் இருந்த போது, கார்த்தி சிதம்பரம் விசாரணைக்கு எந்த ஒத்துழைப்பும் தரவில்லை. குற்றம் சாட்டப்பட்டவரின் ஒத்துழைப்பு இன்றி சிபிஐயால் எந்தவிதமான விசாரணையும் நடத்த இயலாது.

தற்போதுள்ள சூழலில் குற்றம் சாட்டப்பட்டருக்கு எதிரான ஏராளமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அவருக்கு ஜாமீன் அளிக்கும் பட்சத்தில் வெளியில் சென்று ஆதாரங்களை அழிக்கும் வேலையில் ஈடுபடும் அளவுக்கு செல்வாக்கு மிகுந்தவர் எனத் தெரிவித்தார்.

முன்னதாக கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஜாமீன் மனுவும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதை தள்ளுபடி செய்த நீதிபதி சுணில் ராணா, கார்த்தி சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை கூடுதலாக 15 நாட்கள் நீட்டித்து, அதாவது வரும் 24-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் திஹார் சிறையில் அடைக்க ஆணையிட்டார்.

தனிஅறை கிடையாது

இதற்கிடையே கார்த்தி சிதம்பரம் சார்பில் மற்றொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சரின் மகன், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர் என்பதால், திஹார் சிறையில் தனி அறை வேண்டும் என்று கோரிக்கை இருந்தார். இதை நிராகரித்த நீதிபதி, திஹார் சிறை என்பது பலகட்ட அடுக்கு பாதுகாப்பு கொண்டது. அதில் எந்தவிதமான பாதுகாப்பு குறைபாடுகளும் இருக்காது. இருப்பினும் காரத்தி சிதம்பரத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் என்று சிறை கண்காணிப்பாளருக்கு உத்தரவுவிடுகிறேன் எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x