Last Updated : 15 Mar, 2018 05:37 PM

 

Published : 15 Mar 2018 05:37 PM
Last Updated : 15 Mar 2018 05:37 PM

உலகில் ‘காஸ்ட்லி’யான நகரம், ‘சீப் சிட்டி’ எது தெரியுமா?: இந்தியாவில் 3 இடங்கள்?

 

உலகில் வாழ்வதற்கு செலவு குறைவான இடங்களில் இந்தியாவில் 3 நகரங்கள் இடம் பெற்றுள்ளன என ஆய்வில் தெரியவந்துள்ளது.

2018-ம் ஆண்டில் உலக அளவில் வாழ்வதற்கு காஸ்ட்லியான நகரம், செலவு குறைவான நகரம் பட்டியல் குறித்து பொருளாதார புலனாய்வு பிரிவு(இஐயு) ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வில் 160 வகையான பொருட்கள், சேவைகளின் விலைகள் ஒப்பீடு செய்யப்பட்டன. உணவு, குடிநீர், உடை, வீட்டுக்குத்தேவையான பொருட்கள் சப்ளை, தனிமனிதர் பயன்படுத்தும் பொருட்கள், வீட்டு வாடகை, போக்குவரத்து செலவு, அன்றாடச் செலவு, தனியார் பள்ளிக்கட்டணம், வேலையாட்கள் கூலி, பொழுதுபோக்கு கட்டணம் ஆகியவை கணக்கில் எடுத்து ஒப்பீடு செய்து பார்க்கப்பட்டது.

உலகிலேயே மிகக் குறைந்த செலவில் வாழ்வதற்கு தகுதியான இடத்தில் முதலிடத்தில் சிரியா நாட்டின் டமாஸ்கஸ் உள்ளது. அடுத்தார்போல், வெனிசுலா நாட்டின் தலைநகர் கராகஸ் நகரம், கஜகஸ்தானின் வர்த்தக நகரம் அல்மாட்டி ஆகியவை முறையே 3 இடங்களில் இருக்கின்றன.

முதல் 10 இடங்களில், லாகோஸ்(நைஜீரியா) நகரம் 4-வது இடத்திலும், பெங்களூரு 5-வது இடத்திலும், கராச்சி 6-வது இடத்திலும், அல்ஜீயர்ஸ்(அல்ஜீரியா) 7-வது இடத்திலும் உள்ளன. சென்னை மாநகரம் 8-வது இடத்திலும், புச்சாரெஸ்ட்(ரோமானியா) நகரம் 9-வது இடத்திலும், புதுடெல்லி 10-வது இடத்திலும் உள்ளன.

காஸ்ட்லியான நகரங்களில் தொடர்ந்து 5-வது ஆண்டாக சிங்கப்பூர் முதலிடத்தில் இருந்து வருகிறது. 2-வதாக ஜூரிச்(சுவிட்சர்லாந்து) நகரமும், ஹாங்காங் 4-வது இடத்திலும் உள்ளன.

மேலும், 5-வது இடத்தில் ஓஸ்லோ(நார்வே), 6-வது இடத்தில் ஜெனிவாவும், 7-வது இடத்தில் சியோல்(தென் கொரியா), 8-வது இடத்தில் கோபெஹென் (டென்மார்க்), 9-வது இடத்தில் டெல் அவிவ்(இஸ்ரேல்), 10-வது இடத்தில் சிட்னி(ஆஸ்திரேலியா) நகரம் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x