Published : 02 Mar 2018 02:30 PM
Last Updated : 02 Mar 2018 02:30 PM

மகள் இறந்த செய்தி அறிந்தும் சாலையில் உயிருக்கு போராடியவரை காப்பாற்றிய போலீஸ்: குவியும் பாராட்டுகள்

மகள் இறந்த செய்தி அறிந்தும் கூட சாலையில் உயிருக்கு போராடிய ஒருவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உயிரைக் காப்பாற்றியபின் சென்ற தலைமை காவலருக்கு பாராட்டுக்குள் குவிகிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் சஹரான்பூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் தலைமை போலீஸ்கான்ஸ்டபிளாக வேலைப் பார்த்துவரும் பூபேந்திர தோமர்(வயது57) என்பவர்தான் அந்த பாராட்டுக்கு சொந்தக்காரர்.

கடந்த மாதம் 23-ம் தேதி பூபேந்திர தோமர் சாலைப்பாதுகாப்பு ரோந்து வாகன பணிக்கு மாற்றப்பட்டு இருந்தார். அப்போது, பண்டேகான் பகுதியில் ரோந்துப்பணியில் பூபேந்திரகுமார் உள்ளிட்ட போலீஸார்கள் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சஹரான்பூர் சாலையில் ஒரு இளைஞர் கத்திக்குத்து காயத்துடன் உயிருக்கு போராடி வருவதாக பூபேந்திர குமாருக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து, உடனடியாக வாகனைத்தைதிருப்பி அந்த சம்பவம் நடத்துக்கு அனைவரும் சென்றனர்.

இந்நிலையில், அந்த இடத்தை அடைந்ததும், பூபேந்திர குமாரின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் அவரின் 27வயது மகள் ஜோதி திடீரென மரணமடைந்துவிட்டதாக தகவல் வந்தது. இதைக் கேட்டு பூபேந்திரா அதிர்ச்சியில் உறைந்தார்.

செவிலியராக பணியாற்றி வந்த தனது மகள் ஜோதிக்கு கடந்த ஓரு ஆண்டுக்கு முன்புதான் திருமணம் செய்து வைத்திருந்தார். இதனால், பூபேந்திரா மிகவும் மனது நொந்து காணப்பட்டார். உடன் இருந்த போலீஸார் நீங்கள் உடனடியாக வீட்டுக்குச் செல்லுங்கள் என்று ஆறுதல் கூறினர்.

ஆனால், யாரும் வாகனத்தை எனது வீட்டுக்கு திருப்ப வேண்டாம், இங்கே சாலையில் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார். அவரை முதலில் காப்பாற்ற வேண்டும் என்று கூறி தனது கண்ணீரை அடக்கிக் கொண்டார்.

அதன்பின் காயமடைந்த அந்த இளைஞரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து, அவரின் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை எனத் தெரிந்தபின் அங்கிருந்து பூபேந்திரா சென்றார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த இளைஞர், ஒரு கால்நடை மருத்துவர், அடையாளம் தெரியாத சிலர் அவரை கத்தியால் குத்தி அவரிடம் வழிப்பறி செய்துவிட்டது பின்பு விசாரணையில் தெரியவந்தது.

அதன்பின் பூபேந்திரா வீட்டுக்கு சென்று தனது மகளின் இறுதிச்சடங்கு பணிகளை கவனித்து அவரை அடக்கம் செய்தார். மகள் இறந்த செய்தி அறிந்தும், மற்றொரு உயிரை காக்கும் பணியில் இருந்து, கடமையை தவறாமல் பணியாற்றிய பூபேந்திராவை சஹரான்பூர் போலீஸ் டிஐஜி சரச் சச்சான் , போலீஸ் எஸ்பி, பப்லூ குமார் ஆகியோர் பாராட்டி வெகுமதியும் அளித்தார். மேலும் சமூக வலைதளங்களிலும் பூபேந்திராவுக்குபாராட்டுகள் குவிந்து வருகிறது.

இது குறித்து பூபேந்திரா நிருபர்களிடம் கூறியதாவது:

எனது ஒரே மகள் ஜோதி பக்சர் சுகாதார மையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தார். கடந்தஆண்டு அவருக்கு மீரடை நகரைச் சேர்ந்த சவுரப் கக்ரானுக்கு திருமணம் செய்துவைத்தேன். கடந்த 23ம் தேதி குளியல் அறைக்கு சென்ற ஜோதி திடீரென மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். இந்த செய்தி எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனது மகள் இறந்த செய்தி எனக்கு கிடைக்கும் போது, நான் ராம்பூர் பகுதிக்குச் சென்று கொண்டு இருந்தோம். அங்கே ஒரு இளைஞர் சாலையில் உயிருக்கு போராடி வருகிறார் என்ற செய்தி அறிந்து அங்கு சென்றோம். ஆனால், என் மகள் உயிரிழந்த செய்தியைக் காட்டிலும் ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஆவல்தான் அதிகமாக இருந்தது. அதனால்,தான் முதலில் அந்த இளைஞரின் உயிரைக் காப்பாற்றும் பணிக்கு முக்கியத்துவம் அளித்தேன்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x