

3 நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, சீன மொழி பேசி வரவேற்றார் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்க், இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை வியாழக்கிழமை சந்தித்தார்.
அபோது, ஜி ஜின்பிங்கை, சீன மொழியில் வரவேற்றார் சுஷ்மா ஸ்வராஜ். அதற்கு சீன அதிபர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
முன்னதாக, டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர், மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.