நடிகர் சசிகபூர் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் சசிகபூர் மருத்துவமனையில் அனுமதி
Updated on
1 min read

இந்தி திரைப்பட உலகின் பழம்பெரும் நடிகரான சசிகபூர் உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

76 வயதாகும் அவருக்கு கடந்த சில நாட்களாக மூச்சுக் கோளாறு இருந்ததாகவும், இதனை அடுத்து உடல் நிலை மோசமடைந்ததால் அவரை ஞாயிற்றுக்கிழமை மாலை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தீவார், சில்சிலா, சத்யம் சிவம் சுந்தரம் உள்ளிட்ட 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் சசிகபூர், கடந்த 2010-ஆம் ஆண்டு பிலிம்ஃபேரின் வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in