Published : 23 May 2019 04:32 PM
Last Updated : 23 May 2019 04:32 PM

முடிவை ஏற்றுக்கொள்கிறேன்; வாக்கு இயந்திரத்தில் சந்தேகம்: சரத் பவார் சூசகம்

மக்கள் அளித்துள்ள தேர்தல் முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனினும், வாக்கு இயந்திரச் செயல்பாடுகளில் மக்களுக்கு சந்தேகம் இருப்பதாக பாஜக வெற்றியை சுட்டிக்காட்டி சரத் பவார் கருத்து தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலின் முன்னணி நிலவரங்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. இந்திய அளவில் பாஜக தனியாகவே தற்போது 301 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. கூட்டணியுடன் சேர்ந்து 347 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா - பாஜக கூட்டணி 42 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதில் காங்கிரஸ் கூட்டணி தோல்வி முகம் கண்டுள்ளது.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் ஏஎன்ஐயிடம் தெரிவிக்கையில், ''மக்கள் அளித்துள்ள இத்தேர்தல் முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனினும், மக்கள் இவிஎம் இயந்திரங்கள் குறித்து சந்தேகங்களைக் கொண்டிருந்தனர்.

ராஜீவ் காந்தியின் காலத்தில் காங்கிரஸ் மிகவும் நன்றாகச் செயல்பட்டது. எனினும், வாஜ்பாய் வெற்றி பெற்ற போதுகூட தேர்தல் முடிவுகள் குறித்து யாருக்கும் எந்தவித ஐயமும் எழவில்லை.

ஆனால், இப்போது அப்படியில்லை. இவிஎம் இயந்திரம் குறித்தே மக்களுக்குப் பலவித ஐயங்கள் எழுந்துள்ளன'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x