Published : 06 May 2019 01:20 PM
Last Updated : 06 May 2019 01:20 PM

தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்த கையோடு வாக்களித்த இளைஞர்

மத்தியப் பிரதேசத்தில் தனது தந்தையின் இறுதிச் சடங்குகளை முடித்துகையோடு வாக்குச்சாவடிக்கு வந்த மகன் வாக்களித்தது அங்கிருந்தோரிடையே உருக்கத்தை ஏற்படுத்தியது.

 

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த ஏப்ரல் 11, 18, 23, 29 ஆகிய தேதிகளில் 4 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ளன. ஐந்தாம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

 

7 மாநிலங்கள்

 

உத்தரப் பிரதேசம் 14, ராஜஸ்தான் 12, மேற்குவங்கம் 7, மத்தியப் பிரதேசம் 7, பிஹார் 5, ஜார்க்கண்ட் 4, காஷ்மீர் 2 தொகுதிகள் என 7 மாநிலங்களைச் சேர்ந்த 51 மக்களவைத் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தின் சத்தார்பூர் தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது வயது முதிர்வால் இறந்த தனது தந்தையின் இறுதிச் சடங்குகளை முடித்த இளைஞர் ஒருவர், அதே கோலத்தில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார். இது காண்போரிடையே உருக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.

 

ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெறும்  7 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் சுமார் 1.25 லட்சம் பாதுகாப்புப் படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். மேற்குவங்கத்தில் கடந்த தேர்தல்களின்போது வன்முறைச் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றதால் வாக்குச்சாவடிகளின் பாதுகாப்பு, மத்திய படை வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதேபோல காஷ்மீரின் லடாக், அனந்தநாக் தொகுதிகளின் வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x