Published : 28 May 2019 16:19 pm

Updated : 28 May 2019 16:19 pm

 

Published : 28 May 2019 04:19 PM
Last Updated : 28 May 2019 04:19 PM

மத்திய அமைச்சராக சிராக் பாஸ்வான்: லோக் ஜனசக்தி முடிவில் திடீர் மாற்றம்

மத்திய அமைச்சரவையில் லோக் ஜனசக்தி கட்சிக்கு இடம் அளிக்கப்பட்டால் அக்கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் அமைச்சர் பதவியேற்பார் என அக்கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் பிஹாரில் பாஜக கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 40 இடங்களில் 39 இடங்களில் பாஜக அணி வெற்றி பெற்றது. பாஜக 17 இடங்களிலும், ஐக்கிய ஜனதாதளம் 16 இடங்களிலும் லோக் ஜனசக்தி 6 இடங்களிலும் வென்றன.


பிஹாரின் லோக் ஜனசக்தி கட்சிக்கும் மத்திய அமைச்சரவையில் இடமளிக்கப்பட உள்ளது. அக்கட்சியின் நிறுவனர் ராம்விலாஸ் பாஸ்வான் தற்போது அமைச்சராக உள்ளார்.

அவர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. அவரது மகனான சிராக் பாஸ்வான் வெற்றி பெற்றநிலையில் அவர் அமைச்சரவையில் சேருவார் எனத் தகவல் வெளியானது. ஆனால் இதனை லோக் ஜனசக்தி கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

லோக் ஜனசக்திக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டால் ராம்விலாஸ் பாஸ்வான் அமைச்சர் பதவியில் தொடருவார் என அக்கட்சி விளக்கம் அளித்துள்ளது.

அதுபோலவே தனக்கு அமைச்சர் பதவியில் அமரும் எண்ணம் தனக்கு இல்லை என சிராக் பாஸ்வானும் கூறியுள்ளார். பிஹரில் லோக் ஜனசக்திக்கு மாநிலங்களவையில் ஓரிடம் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ராம் விலாஸ் பாஸ்வான் மீண்டும் அமைச்சரானால் அவர் மாநிலங்களவை எம்.பி.யாக கூடும் எனத் தெரிகிறது.


தவறவிடாதீர்!

    மக்களவைத் தேர்தல்பாஜககாங்கிரஸ்

    Sign up to receive our newsletter in your inbox every day!

    You May Like

    More From This Category

    More From this Author