Published : 07 May 2019 12:00 AM
Last Updated : 07 May 2019 12:00 AM

ஆந்திரா மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட 5 வாக்கு மையங்களில் மறு வாக்குப்பதிவு

ஆந்திராவில் நேற்று 5 வாக்குப் பதிவு மையங்களில் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் அசம்பாவிதங்களை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

ஆந்திராவில் மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த மாதம் 11-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பல இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இது தொடர்பாக தெலுங்கு தேசம் - ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் இடையே கடும் மோதல் உருவானது. பல இடங்களில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, மீண்டும் தொடங்கப்பட்டது. இதனால் வாக்குப்பதிவு இரவு வரை நீடித்தது. வாக்குப் பதிவு தாமதமான இடங்களில் பலர் வாக்களிக்காமல் வீடு திரும்பியதாக புகார் எழுந்தது. இந்த இடங்களில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் தெலுங்கு தேசம் கட்சியினர் முறையிட்டனர்.

இதனை பரிசீலித்த தேர்தல் ஆணையம், குண்டூர், பிரகாசம், நெல்லூர் ஆகிய மாவட்டங்களில் 5 வாக்கு மையங்களில் மட்டும் மறுவாக்குபதிவு நடத்த முடிவு செய்தது. அதன்படி, இந்த மையங்களில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதில் திரளான மக்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு மீண்டும் வாக்களித்தனர். இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x