Last Updated : 19 May, 2019 08:02 PM

 

Published : 19 May 2019 08:02 PM
Last Updated : 19 May 2019 08:02 PM

பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு

மக்களவைத் தேர்தலுக்கு பின் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானவற்றில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக்க கூட்டணி பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதிவரை 7 கட்டங்களாக 542 தொகுதிகளுக்கும் நடந்தது. தேர்தல் முடிந்தநிலையில், பிந்தைய கருத்துக்கணிப்புகள் இன்று வெளியாகியுள்ளன.

இதில் சிஓட்டர்ஸ்-ரிபப்ளிக் மற்றும் டைம்ஸ் நவ் ஆகிய இரு சேனல்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக்ககூட்டணி 296 இடங்கள் முதல் 306 இடங்கள் வரை பிடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதாவது, இரு சேனல்களிலும் வெளியான கருத்துக்கணிப்புகளில் பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மை பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 126 இடங்கள் முதல் 132 இடங்கள் வரை பிடிக்க வாய்ப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேடா- நியூஸ் எக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்புகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 242 இடங்கள் வரை மட்டுமே கிடைக்கும் என்று  நியூஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 164 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸ்-18 நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தேசிய ஜனநாயக்க கூட்டணிக்கு 292 இடங்கள் முதல் 312 இடங்கள் வரை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு  62 இடங்கள் முதல் 72 இடங்கள் வரை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தைப் பொறுத்தவரை பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகளின் மகாகட்பந்தன் கூட்டணி அதிக இடங்களை வெல்லும், பாஜகவுக்கு கடந்த முறை கிடைத்த 71 இடங்கள் கிடைக்க வாய்ப்பில்லை, 30 முதல் 40 தொகுதிகள் வரை கிடைக்கவே வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x